அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை... வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்

அசாம் மாநிலம், ஹசாவோ மாவட்டத்தில் பெய்த கனமழையால், ரயில்நிலையத்தில் மழை நீர் தேங்கியது.

Update: 2022-05-16 15:07 GMT
திஸ்பூர்,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் மற்றும் அதன் அண்டை மாநிலங்களான மேகாலயா மற்றும் அருணாசல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து பல்வேறு ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.  

ஹொஜய், லகீம்பூர் மற்றும் நகாவன் மாவட்டங்களில் பல்வேறு சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்ப்பாசன கால்வாய்கள் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டு உள்ளன.  பெரிய அளவிலான நிலச்சரிவுகள் மற்றும் தேங்கிய நீர் ஆகியவற்றால் ரெயில்வே தண்டவாளங்கள், பாலங்கள் மற்றும் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் கனமழையால், அசாமின் ஹசாவோ மாவட்டத்தில் உள்ள ரயில்நிலையத்தில் மழை நீர் தேங்கியது. இதனால் ரயில்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நியூ ஹாஃவ்லோங் ரயில் நிலையம் அமைந்துள்ள பகுதியில், மலைக் குன்றுகளும் சுரங்கங்களும் உள்ளன. இதனால் தண்டவாளம் முழுவதும் நிரம்பி ரயில் நிலையமே சேற்றால் மூடப்பட்டுள்ளதோடு ரயில்களும் சாய்ந்து சேதமடைந்துள்ளன.

மேலும் செய்திகள்