நாட்டின் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது: சோனியா காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் சிந்தனை அமர்வு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பேசினார்.

Update: 2022-05-13 09:54 GMT
ஜெய்பூர், 

காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டம் ராஜஸ்தானின் உதய்பூரில் தொடங்கியுள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில்,  காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்தக் கூட்டத்தில் இன்று உரையாற்றிய அக்கட்சியின்  இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூறியதாவது;- 

“ பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளால் நாடு எதிர்கொண்டுள்ள பல்வேறு சவால்கள் குறித்து நமக்குள் விவாதிக்க இந்தக் கூட்டம் வாய்ப்பு அளித்துள்ளது. நமக்கு முன்னால் உள்ள பல பணிகளைப் பற்றி ஆலோசிக்க இது ஒரு சந்தர்ப்பமாகும். 'அதிகபட்ச நிர்வாகம், குறைந்தபட்ச அரசு' என்ற அவர்களின் முழக்கத்தின் மூலம் பிரதமர் மோடியும் அவரது சகாக்களும் உண்மையில் எதைக் குறிப்பிடுகிறார்கள் என்பது இப்போது தெளிவாக தெரிகிறது.  

இதன் அர்த்தம் என்னவெனில், நாட்டை தொடர்ந்து பிரிவினையில் வைத்திருப்பது,  மக்களை தொடர்ந்து பயம் மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ நிர்பந்தித்தல், பாதிக்கப்பட்டவர்களை கடுமையாக  குறிவைப்பது  நமது சமூகத்தின் ஒரு அங்கமாகவும்   குடியரசின் சம குடிமகன்களுமான சிறுபான்மையினரை கொடூரமாக நடத்துவது   என்பதே ஆகும். ஜனநாயகத்திற்காக குரல் கொடுப்போர் மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் அச்சுறுத்தப்படுகின்றனர். இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது” என்றார்.

மேலும் செய்திகள்