இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் சுப்பிரமணிய சாமி சர்ச்சை டுவீட்

இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-05-10 14:59 GMT
புதுடெல்லி,

இலங்கையில் அரசு மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தும் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முப்படைகளுக்கும் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் காவல் துறையினரால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலையில், ராணுவத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில்,  பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி  தனது  டுவிட்டர் பதிவில்,

"அரசியலமைப்புச் சட்டத்தை மீட்டெடுக்க இந்தியா தனது ராணுவத்தை கண்டிப்பாக அனுப்ப வேண்டும். தற்போது, மக்களின் கோபத்தை இந்திய எதிர்ப்பு சக்திகள் பயன்படுத்திக் கொள்கின்றன. இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பை பாதிக்கிறது" என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்