இந்தியாவில் கொரோனா பற்றிய செய்தி படங்களுக்காக மறைந்த இந்திய பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கிற்கு புலிட்சர் விருது!

காஷ்மீரி பத்திரிகை புகைப்படக் கலைஞர் சன்னா இர்ஷத் மேட்டூவுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டது.

Update: 2022-05-10 04:50 GMT
வாஷிங்டன்,

பத்திரிகை, புத்தகங்கள், நாடகம் மற்றும் இசை ஆகிய துறைகளில் 2022 ஆம் ஆண்டுக்கான புலிட்சர் பரிசு வென்றவர்கள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. 

இந்தியர்களான அட்னான் அபிடி, சன்னா இர்ஷாத் மட்டூ, அமித் டேவ் மற்றும் மறைந்த டேனிஷ் சித்திக் ஆகியோருக்கு பத்திரிகைத் துறையில் ஆவண புகைப்படத்துக்கான பிரிவில் புலிட்சர் பரிசு அறிவிக்கப்பட்டது. 

இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை மற்றும் விவரம் பற்றிய செய்தி படங்களுக்காக அவர்களுக்கு புலிட்சர் பரிசு அறிவிக்கப்பட்டது. 

1917ஆம் ஆண்டு முதல் பத்திரிகை, இணைய ஊடகம், இலக்கியம், இசையமைப்பு, நாடகம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குகிறவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் புலிட்சர் பரிசு வழங்கப்படுகிறது. கொலம்பியா பல்கலைக்கழகம் மூலம், அமெரிக்க பத்திரிகையாளர் ஜோசப் புலிட்சர் பெயரில் இவ்விருது வழங்கப்படுகிறது.

காஷ்மீரி பத்திரிகை புகைப்படக் கலைஞர் சன்னா இர்ஷத் மட்டூ தற்போது இவ்விருதைப் பெற்றுள்ளார். அவர் பல்வேறு சர்வதேச பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். காஷ்மீரி வல்லா பத்திரிகையில் பணியாற்றி வந்த இவர் தற்போது பிரீலான்சிங் முறையில் குறிப்பிட்ட சில பத்திரிகைகளுக்கு பணியாற்றி வருகிறார். இந்தியாவில் கொரோனா நெருக்கடியைப் பற்றி செய்தி வெளியிட்டதற்காக மறைந்த டேனிஷ் சித்திக், அட்னான் அபிடி, அமித் தேவ் உள்ளிட்ட குழுவுடன் சேர்ந்து மட்டூ இவ்விருதை வென்றுள்ளார்.

 கடந்த ஆண்டு காஷ்மீரி புகைப்படக் கலைஞர்களான தர்யாஷின், முத்தார்கான், சன்னி ஆனந்த் ஆகிய 3 பேர் புலிட்சர் பரிசு பெற்றனர்.
 இதுகுறித்து, புலிட்சர் தனது டுவிட்டரில் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், அட்னான் அபிடி, மட்டூ சன்னா, அமித் தேவ், மறைந்த டேனிஷ் சித்திக்கின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளது.

மறைந்த டேனிஷ் சித்திக் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியது குறித்து செய்தி சேகரிக்கச் சென்றபோது அங்கு நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்