சத்தீஸ்காரில் 4 நக்சலைட்டுகள் சரண்

சத்தீஸ்காரில் 4 நக்சலைட்டுகள் போலீசாரிடம் சரண் அடைந்து உள்ளனர்.

Update: 2022-05-09 00:54 GMT
தந்தேவடா,

சத்தீஸ்கார் மாநிலத்தில் நக்சலைட் ஆதிக்கம் அதிகம். இந்த நிலையில் பயங்கரவாதத்தில் இருந்து அவர்களை மீட்டெடுக்க போலீசாரால் மறுவாழ்வு திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தந்தேவடா மாவட்டம் பஸ்தர் பயங்கரவாதிகள் மறுவாழ்வு திட்டத்தின் மூலம் திருந்தி வாழ சம்மதம் தெரிவித்து 4 நக்சலைட்டுகள் போலீசாரிடம் சரண் அடைந்து உள்ளனர்.

இவர்கள் கடந்த 8 ஆண்டுகளாக நக்சலைட் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து பயணித்தவர்கள். பல்வேறு பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டதாக அவர்கள் மீது வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த நிலையில் அவர்கள் திருந்தி வாழ முடிவு செய்துள்ளனர். இவர்களையும் சேர்த்து, இதுவரை மறுவாழ்வு திட்டம் மூலம் 535 பயங்கரவாதிகள் சரண் அடைந்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்