உச்சநீதிமன்ற நீதிபதியாகும் உயர் நீதிமன்ற நீதிபதிகள்

இரு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக நாளை பதவி ஏற்கின்றனர்.

Update: 2022-05-08 13:17 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி,
 
அசாம் மாநிலம் குவஹாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுதான்ஷூ ஜூலியா மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஜேபி பர்திவாலா ஆகியோரை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்க தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான கொலிஜீயம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. 

அதை மத்திய அரசு ஏற்ற நிலையில், இருவரையும் உச்ச நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். 

இந்த நிலையில் புதிய நீதிபதிகளான இருவரும் நாளை காலை பத்தரை மணியளவில் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக பதவி ஏற்க உள்ளனர். இதன் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை  34 ஆக உயர்ந்துள்ளது.  

மேலும் செய்திகள்