தேசிய கல்விக்கொள்கை குறித்து பிரதமர் மோடி ஆய்வு
தேசிய கல்விக்கொள்கை அமலாக்கம் குறித்து நேற்று நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.
புதுடெல்லி,
தேசிய கல்விக்கொள்கை அமலாக்கம் குறித்து நேற்று நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.
அப்போது பேசிய மோடி, ‘எளிதில் கிடைப்பது, சமத்துவம், அனைவரையும் உள்ளடக்குவது, தரம் ஆகியவற்றை உள்ளடக்கி புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் அளவுக்கு அதிகமாக தொழில்நுட்பத்துக்கு உள்ளாவதைத் தவிர்க்கும்வகையில், ஒரு புதிய, நேரடியாக, ஆன்லைன் வாயிலாக கற்கும் கலப்பு முறையை உருவாக்க வேண்டும்.
மாணவர்களிடம் திறன்களை வளர்ப்பதற்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொம்மைகளைப் பயன்படுத்த வேண்டும்.
பள்ளியில் இருந்து இடைநின்ற மாணவர்களை கண்டுபிடித்து மீண்டும் பள்ளிக்கு கொண்டுவருவது போன்ற சிறப்பு முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டின் முன்னேற்றத்துக்கு அவை வழிகோலும்.’
இவ்வாறு அவர் கூறினார்.