16-ந்தேதி பிரதமர் மோடி நேபாளம் பயணம் புத்தர் பிறந்த இடத்துக்கு செல்கிறார்

நேபாள பிரதமர் ஷெர்பகதுர் துபா அழைப்பின்பேரில், பிரதமர் மோடி இம்மாதம் 16-ந்தேதி சில மணி நேர பயணமாக நேபாளத்துக்கு செல்கிறார்.

Update: 2022-05-04 17:51 GMT
காத்மாண்டு, 

நேபாள பிரதமர் ஷெர்பகதுர் துபா அழைப்பின்பேரில், பிரதமர் மோடி இம்மாதம் 16-ந்தேதி சில மணி நேர பயணமாக நேபாளத்துக்கு செல்கிறார். புத்தர் பிறந்த புத்த பூர்ணிமாவையொட்டி, புத்தர் பிறந்த இடமான லும்பினிக்கு செல்கிறார். அவருடன் ஷெர்பகதுர் துபாவும் பங்கேற்கிறார். கடந்த 2019-ம் ஆண்டு மீண்டும் பிரதமரான பிறகு மோடி நேபாளத்துக்கு செல்வது இதுவே முதல்முறை ஆகும்.

இத்தகவலை நேபாள பிரதமரின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். ஆனால், மத்திய வெளியுறவு அமைச்சகம் இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

மேலும் செய்திகள்