திருப்பதியில் சாமி தரிசனத்துக்கு 14 மணி நேரம் ஆகிறது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் சனி, ஞாயிறு மற்றும் பண்டிகை விடுமுறை காரணமாக பல்வேறு மாநிலங்களில் 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் திருப்பதி கோவிலில் கூட்டம் அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் 65 ஆயிரத்து 756 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 34 ஆயிரத்து 774 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோவிலில் தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் ரூ.4 கோடியே 60 லட்சம் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
கோவிலில் இலவச தரிசன வரிசையில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 38 அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுமார் 14 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் ரூ.300 சிறப்பு தரிசனத்துக்கு செல்பவர்கள் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி செய்து வருகின்றனர்.