உரங்களின் இருப்பு குறித்து மாநில வேளாண் அமைச்சர்களுடன் மத்திய மந்திரிகள் ஆலோசனை
அனைத்து மாநில வேளாண் அமைச்சர்களுடன் நாட்டில் உரங்களின் இருப்பு குறித்து நேற்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.
புதுடெல்லி,
மத்திய வேளாண் துறை மந்திரி நரேந்திரசிங் தோமர், மத்திய சுகாதாரம் மற்றும் ரசாயனம், உரங்கள் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ஆகியோர் அனைத்து மாநில வேளாண் அமைச்சர்களுடன் நாட்டில் உரங்களின் இருப்பு குறித்து நேற்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், மத்திய மந்திரிசபை காரீப் பருவத்துக்கான பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு மானியத்தொகையாக ரூ.60 ஆயிரத்து 939.23 கோடி ஒப்புதல் அளித்திருப்பது பற்றியும் பேசப்பட்டது.கூட்டத்தில் பேசிய மன்சுக் மாண்டவியா, டி.ஏ.பி. உரங்களுக்கான மானியத்தை 50 சதவீதம் உயர்த்தி ஒரு பைக்கு ரூ.2,501 வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிவித்த அவர், இதன்மூலம் குறைவான விலையில் விவசாயிகள் உரங்களை பெற முடியும் என்றும் கூறினார்.