இந்திய ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்றார் மனோஜ் பாண்டே
இந்தியாவின் 29 ஆவது ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதுடெல்லி,
இந்திய ராணுவத்தில் 28 ஆவது தலைமை தளபதியாக இருக்கும் எம்.எம்.நரவனே இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில், தற்போது ராணுவத்தின் துணை தலைமை தளபதியாக இருக்கும் மனோஜ் பாண்டே, 29 ஆவது ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்திய ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றிய ஒருவர் தளபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். நாக்பூரை சேர்ந்த மனோஜ் பாண்டே தேசிய பாதுகாப்பு அகடெமியில் பயின்றவர் ஆவார். மனோஜ் பாண்டே, இந்திய ராணுவத்தின் கிழக்கு பிரிவு மற்றும் அந்தமான் நிகோபார் பிரிவு தளபதியாகவும் பணியாற்றியவர்.
இவர் ஏற்கெனவே பிப்ரவரி 1 ஆம் தேதி ராணுவ துணை தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார். இரண்டு மாதங்கள் ராணுவ துணை தலைமை தளபதியாக பணியாற்றிய நிலையில், தற்போது ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.