போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டாம் - அரசுக்கு குமாரசாமி வேண்டுகோள்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டாம் என அரசுக்கு குமாரசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-04-29 20:42 GMT
பெங்களூரு,

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி நியமன தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளன. பணத்திற்கு ஆசைப்பட்டு சிலர் ஒட்டுமொத்த தேர்வு நடைபெறும் நடைமுறையையே பாழாக்கிவிட்டனர். தவறு செய்தவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். 

தவறான வழியில் பணியை பெற்றவர்கள் யார் என்பதை கண்டித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் நேர்மையான முறையில் படித்து தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு அநீதி ஏற்படக்கூடாது.

முறைகேடு புகார் குறித்து சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் மறுதேர்வு நடத்துவதாக அரசு அறிவித்துள்ளது. இது சரியல்ல. அரசே தவறு செய்துள்ளதா?. மறுதேர்வு நேர்மையாக நடத்தப்படும் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது. தவறு செய்தவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வரும் நாட்களில் இத்தகயை தவறுகள் நடைபெறாது. 

தவறு நடந்தது என்பதற்காக ஒட்டுமொத்தமாக தேர்வையே ரத்து செய்வது சரியல்ல. அதனால் அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டாம். தேர்வை ரத்து செய்வதால் நேர்மையாக வெற்றி பெற்றவர்களுக்கு அநீதி ஏற்படும். இது சரியல்ல.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

மேலும் செய்திகள்