கர்நாடகா: தேர்வு தாள் திருத்தும் மையத்தில் பாதுகாப்புக்காக நின்ற போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை..!

உடுப்பி அருகே எஸ்எஸ்எல்சி தேர்வு தாள் திருத்தும் மையத்தில் பாதுகாப்புக்காக நின்ற போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-04-29 09:24 GMT
கர்நாடகா:

கர்நாடகா மாநிலம், உடுப்பி அருகே உள்ள பைந்தூரில் வசிப்பவர் ராஜேஷ். இவர் டிஏஆர் பிரிவில் தலைமை கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருகிறார்.

கர்நாடகா பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி தேர்வு நடைபெற்றது. அதற்கான விடைத்தாள் திருத்தும் மையத்திற்க்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்நிலையில் ராஜேஷ் ஆதி-உடுப்பியில் உள்ள எஸ்எஸ்எல்சி தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் மையத்தில் பாதுகாப்புப் பணியில் நியமிக்கப்பட்டிருந்தார்.

அப்போது ராஜேஷ் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். முதற்கட்ட விசாரணையில் ராஜேஷ் சிறிது காலமாக மனமுடைந்து இருந்ததாக கூறப்படுகிறது.

உயர் போலீஸ் அதிகாரிகள், மற்றும் எஃப்எஸ்எல் குழுவினர் மோப்பநாய் மூலம் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் உடுப்பி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்