மின் நுகர்வு புதிய உச்சத்தை எட்டியது - மத்திய அரசு தகவல்

மின் நுகர்வு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக மத்திய மின்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2022-04-26 17:22 GMT
புதுடெல்லி,

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மின்சார பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் சில மாநிலங்களில் மின்வெட்டு நிலவுகிறது. 

அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு சீராக விநியோகம் செய்யவில்லை என சில மாநில அரசுகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் மின் வெட்டை தடுக்க அந்தந்த மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், மின் நுகர்வு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக மத்திய மின்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக மத்திய மின்சார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று 201 ஜிகாவாட் மின் தேவை ஏற்பட்டது. இதனால் மின் நுகர்வு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மின் தேவை அதிகரித்துள்ளது. அதிகரித்துவரும் மின் தேவை, நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பிரதிபலிப்பை காட்டுகிறது. மின் தேவையை பூர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்