ஜனாதிபதி மாளிகையில் போரிஸ் ஜான்சனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2022-04-22 04:03 GMT
புதுடெல்லி,

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவில் 2 நாள் சுற்றப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் நேற்று காலையில் குஜராத் மாநிலம் ஆமதாபாத் வந்து சேர்ந்தார்.

விமான நிலையத்தில் அவரை குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல், கவர்னர் ஆச்சார்யா தேவ்ராத் மற்றும் மாநில மந்திரிகள், உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

அத்துடன் பல்வேறு கலைக்குழுவினர் விமான நிலையத்தில் பாரம்பரிய நடனம் ஆடியும், இசைக்கருவிகளை இசைத்தும் போரிஸ் ஜான்சனுக்கு வரவேற்பு அளித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் இன்று  பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதில் இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், டெல்லியில்  ஜனாதிபதி மாளிகையில் இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சனை பிரதமர் மோடி வரவேற்றார். இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கு அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்