டெல்லியில் புதிதாக 965 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 965 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-04-21 17:16 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக காட்டுத்தீ போல அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு வேகமாக பரவுவதால் மீண்டும் முக கவசம் அணிவது கட்டாயம் போன்ற நடவடிக்கைகளை அமல்படுத்த டெல்லி முடிவு செய்துள்ளது.  

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 965ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 635 பேர் குணம் அடைந்த நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2,970 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 4.71 சதவிகிதமாக உள்ளது. 

மேலும் செய்திகள்