டெல்லியில் வீட்டின் முன்பு பாஜக நிர்வாகி சுட்டுக் கொலை
டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ளூர் பாஜக நிர்வாகி அவரது வீட்டின் முன்பு சுட்டுக் கொல்லப்பட்டார்.
புதுடெல்லி,
டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ளூர் பாஜக நிர்வாகி ஜிது சவுத்ரி என்பவர் நேற்று இரவு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
அவரது வீட்டின் முன்பு ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை குறித்து அறிந்த டெல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். குற்றம் நடந்த இடத்திலிருந்து சில தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்று வருவதாக டெல்லி கிழக்கு பகுதி போலீசார் தெரிவித்தனர்.