ஜாகாங்கீர்புரி விவகாரம்: பாஜக அரசின் போக்கு கண்டனத்திற்குரியது - ஜோதிமணி எம்.பி

"மறைமுகமாக ஆதரிக்கும் ஆம் ஆத்மி கட்சி மக்களை பாதுகாக்காமல் வேடிக்கை பார்ப்பது கண்டனத்துக்குரியது என காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஜோதிமணி கூறியுள்ளார்.

Update: 2022-04-20 11:02 GMT
சென்னை,

டெல்லியில் ஜஹாங்கிர்புரியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது, கல்வீசி தாக்கப்பட்டது. இதனால், ஏற்பட்ட கலவரத்தில் 8 போலீசார் உட்பட 9 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், டில்லி மாநில பா.ஜ., தலைவர் ஆதேஷ்குப்தா, டில்லி வடக்கு மாநகராட்சி மேயருக்கு எழுதிய கடிதத்தில், கலவரம் நடந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக்கூறியிருந்தார்.

இதனையடுத்து புல்டோசர் உள்ளிட்ட இயந்திரங்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் இன்று (ஏப்.,20) காலை முதல் ஆக்கிரமிப்புகளை அகற்றத்துவங்கினர்.இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில்  வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட்டு  அந்த இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை விதித்ததுடன், தற்போதைய நிலைமையை தொடர வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும், சில மணிநேரம் ஆக்கிரமிப்பு தொடர்ந்ததாக கூறப்படுகிறது

இந்தநிலையில்,  இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் ஜாகாங்கீர்புரி பகுதியின் ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணிகளை நிறுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்த பின்னரும் அதை மதிக்காமல் தொடர்ந்து புல்டோசர்களை கொண்டு ஏழை மக்களின் கடைகள் மற்றும் வீடுகளை சூரையாடும் பாசிச பாஜக அரசின் போக்கு கண்டனத்திற்குரியது என காங்கிரஸ்  கட்சியின்  எம்.பி ஜோதிமணி கூறியுள்ளார். 

மேலும்  மறைமுகமாக ஆதரிக்கும் ஆம் ஆத்மி கட்சி மக்களை பாதுகாக்காமல் வேடிக்கை பார்ப்பது கண்டனத்துக்குரியது என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்