ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகை
ஐரோப்பிய ஆணையத்தின தலைவர் வருகின்ற 24 தேதி இந்தியாவிற்கு வர உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லியென், இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். அதன்படு வருகின்ற 24 தேதி அவர் இந்தியாவிற்கு வர உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு வருகை தரும் உர்சுலா வொன் டெர் லியென், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைன் விவகாரம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.