"ரொனால்டாவுக்கு சரியான போட்டி" முட்டையை வைத்து கோழி விளையாடும் கால்பந்து
போர்ச்சுகல் அணிக்கு கேப்டனாகவும் இருக்கும் கால்பந்து வீரரான ரொனால்டோ, இந்த கோழியின் திறமையால் ஈர்க்கப்படலாம்.
புதுடெல்லி
சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, புதிய போட்டியை சந்திக் வேண்டியது வரும் என நகைச்சுவை கிராபிக்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. கோழி ஒன்று முட்டையை வைத்து கால்பந்து விளையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பிரீமியர் லீக் கிளப் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக முன்கள வீரராகவும், போர்ச்சுகல் தேசிய அணிக்கு கேப்டனாகவும் இருக்கும் கால்பந்து வீரரான ரொனால்டோ, இந்த கோழியின் திறமையால் ஈர்க்கப்படலாம்.
வீடியோ தெளிவாக நகைச்சுவைக்காக எடிட் செய்யபட்டு உள்ளது தெரிகிறது. கோழியானது கால்பந்தாட்ட வீரர்களை போல் முட்டைய கால்களால் உருட்டி, கால்பந்தாட்ட வீரர்களைப் போல துள்ளி விளையாடுவதை வீடியோ காட்டுகிறது.கோழி முட்டையை அதன் முதுகில் எறிந்து அதன் கழுத்து மற்றும் இறக்கைகளில் முட்டையை உருட்டுகிறது.