ஜஹாங்கீர்புரி வன்முறை வழக்கில் கைதான 12 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
முக்கிய குற்றவாளியாக கருத்தப்படும் இருவருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் விதித்து டெல்லி ரோகினி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லி ஜஹாங்கீர்புரியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது நேற்று இரு பிரிவினர் இடையே மோதல் வெடித்தது. இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வன்முறை குறித்து விசாரிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜனதா, சம்பவத்தின் பின்னணியில் சதி இருப்பதாக கூறியது. வன்முறை தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்ப்பட்ட 14 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வன்முறை வழக்கில் கைதான 14 பேரில் 12 பேருக்கு நீதிமன்றக்காவல் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இருவருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் விதித்து டெல்லி ரோகினி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.