டெல்லி உப்ஹார் தியேட்டரில் தீ விபத்து...!
டெல்லியில் உள்ள உப்ஹார் தியேட்டரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியின் கிரீன் பார்க் பகுதியில் உப்ஹார் தியேட்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தியேட்டர் டெல்லியில் மிகவும் பிரபலமான ஒன்று ஆகும்.
இந்த நிலையில் இந்த உப்ஹார் தியேட்டரில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் விரைந்தனர்.
சம்பவ இடத்திற்கு, விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தியேட்டருக்குள் இருந்த மரச்சாமான்களில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1997ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி உப்ஹார் தியேட்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 59 பேர் பரிதாபமாக மூச்சு திணறி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.