புதுச்சேரி விரைவு ரெயில் தடம் புரண்டது
புதுச்சேரி விரைவு ரெயில் மாட்டுங்கா ரெயில் நிலையம் அருகே தடம் புரண்டது.
தாதர்,
மும்பையின் தாதர் ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட புதுச்சேரி விரைவு ரெயில் இன்று இரவு 9.45 மணியளவில் மாட்டுங்கா ரெயில் நிலையம் அருகே வந்த போது திடீரென ரெயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த விபத்தில் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு உதவி செய்ய ரெயில்வே போலீசார் ரெயில்வே நிர்வாகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்து வருகின்றனர்.