வாரணாசி: வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலி
வாரணாசியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
வாரணாசி,
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியின் அஷ்பக் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, அஷ்பக் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஆடைகளை பேக்கேஜிங் செய்யும் வேலை செய்யும் ஊழியர்கள் இருந்த அறையில் உணவு சமைக்கும் போது மின்சார வயர்களில் தீப்பிடித்துள்ளது. மளமளவென தீ பரவியதில் அறையில் சிக்கிக்கொண்ட ஊழியர்கள் 4 பேர் உடல் கருகி பலியாகினர்.
இந்த நிலையில் இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய வாரணாசி மாவட்ட மாஜிஸ்திரேட், அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.