கோவில் ஊர்வலத்தை முன்னிட்டு நாளை திருவனந்தபுரத்தில் விமான நிலைய ஓடுபாதை மூடல்..!

கோவில் ஊர்வலத்தை முன்னிட்டு நாளை திருவனந்தபுரத்தில் விமான நிலைய ஓடுபாதை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-04-13 20:49 GMT
கோப்புப் படம் ANI
திருவனந்தபுரம்,

பங்குனி திருவிழாவின் ஒரு பகுதியான ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலின் ஆராட்டு ஊர்வலத்தை முன்னிட்டு கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் நாளை (ஏப்ரல் 15) மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை ஓடுபாதை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விமான நிலையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அந்த நேரத்தில் உள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச சேவைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்று மற்றும் இன்று பயணிகளுக்கு கவர்ச்சிகரமான பரிசுகளுடன் பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் விமான நிலையத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷாப்பிங் மையங்களில் பயணிகளுக்கு கவர்ச்சிகரமான சலுகைகள் இருக்கும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்