டீசல் விலை உயர்வு காரணமாக ஆந்திராவில் அரசு பேருந்து கட்டணம் உயர்வு..!

டீசல் விலை உயர்வு காரணமாக ஆந்திராவில் அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

Update: 2022-04-13 18:11 GMT
கோப்புப் படம் ANI
விஜயவாடா,

டீசல் விலை உயர்வு காரணமாக ஆந்திரபிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகம் (ஏ.பி.எஸ்.ஆர்.டி.சி) பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

இதுகுறித்து ஏ.பி.எஸ்.ஆர்.டி.சி நிர்வாக இயக்குனர் துவாரகா திருமலா ராவ் கூறுகையில், டீசல் விலை உயர்வு காரணமாக பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்தில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10 ஆக இருக்கும் என்று கூறினார்.

இதன்மூலம் ஆர்.டி.சிக்கு ரூ.720 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று கூறினார். மேலும் ஆர்.டி.சி சரக்கு சேவைகள் மூலமும் வருவாயை அதிகரிக்கும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்