ரோப் கார் விபத்து; மீட்பு படையினருடன் பிரதமர் மோடி இன்று உரையாடல்

ஜார்க்கண்ட் ரோப் கார் விபத்து மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களுடன் பிரதமர் மோடி இன்று உரையாட உள்ளார்.

Update: 2022-04-13 12:52 GMT
புதுடெல்லி,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 1,500 அடி உயர திரிகூட் மலையில் ரோப் கார்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 60 சுற்றுலா பயணிகள் சுமார் 46 மணி நேரத்திற்கும் மேலாக அந்த ரோப் கார்களில் சிக்கி இருந்தனர். இதையடுத்து இந்திய ராணுவம், இந்திய விமானப்படை, தேசிய பேரிடர் மீட்பு படை, இந்தோ-திபெத் எல்லை போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் இணைந்து ரோப் கார்களில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். 

இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படும் நிலையில், இது குறித்து விரிவான விசாரணை நடத்த ஜார்க்கண்ட் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள், விமானப்படை வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர், உள்ளூர் பொதுமக்கள் ஆகியோரிடம் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு உரையாட உள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.  

மேலும் செய்திகள்