ஜீன்ஸ் பாக்கெட்டில் கைத்துப்பாக்கி ஆசிரியை கைது

உத்தரபிரதேசத்தில் துப்பாக்கி எடுத்துச் சென்ற ஆசிரியை ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-04-13 09:54 GMT
உத்தரபிரதேசம் மெயின்புரி நகரில் உள்ள கோட்வாலி பகுதியில் சந்தேகப்படும் வகையில் சென்ற ஒரு பெண்ணை போலீசார் சோதனையிட்டபோது, அவரது ஜீன்ஸ் பாக்கெட்டில் கைத்துப்பாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

துப்பாக்கியை பறிமுதல் செய்து, அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, அவரது பெயர் கரிஷ்மா சிங் யாதவ் என்பதும் பெரோசாபாத் நகரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியை பணியில் இருப்பதும் தெரிந்தது. கரிஷ்மா சிங்கை கைது செய்த போலீசார், துப்பாக்கியை எதற்காக எடுத்துச் சென்றார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். 

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறும் போது  நகரின் கோட்வாலி பகுதியில் ஒரு பெண் ஆயுதத்துடன் நடமாடுவது குறித்து எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து தேடுதல் வேட்டையில்,ஈடுபட்டபோது நாங்கள் அந்த பெண்ணைக் கண்டுபிடித்து அவரை கைது செய்தோம் என கூறினார்.

மேலும் செய்திகள்