கடன் தொல்லை: கணவன்-மனைவி உட்பட 3 பேர் தற்கொலை...!
கேரளாவில் கடன் தொல்லையால் கணவன், மனைவி உட்பட 3 பேர் தற்கொலை செய்து உள்ளனர்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள வெண்ணிலையில் வசிப்பவர் பிரசாந்த் (வயது 40). இவருடைய மனைவி ரஷீதா (35).
இவரது தாய் கிரிஜா (55). கணவன் பிரசாந்த் அப்பகுதியில் மரம் அறுக்கும் ஆலை நடத்தி வருகிறார்.
தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இதனால் கணவன்-மனைவி இருவரும் மிகுந்த மன உளைச்சலில் இருந்து உள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலையில் தந்தை மற்றும் பாட்டி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு பிரசாந்த மகன் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
பின்னர், இந்த செய்தியை சொல்வதற்காக கண்ணீருடன் தாய் ரஷீதா இருந்த அறைக்கு ஓடிவந்து உள்ளார். அங்கு சிறுவனுக்கு பேரதிர்ச்சியாக தாய்யும் உயிரிழந்த நிலையில் கிடந்து உள்ளார்.
இதனை கண்டு கதறி அழுத அவரின் குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் கொச்சி போலீசார் சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசாருக்க உயிரிழந்த பிசாந்தின் வீட்டில் அவர்கள் எழுதி வைத்த கடிதம் ஒன்று கிடைத்து உள்ளது.
அந்த கடித்தில், 1 கோடி அளவில் இருந்த கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று எழுதப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர். தற்போது இந்த கடித்தை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.