சித்திரை விஷூ பண்டிகை; சபரிமலையில் இன்று நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை விஷூ பண்டிகையை முன்னிட்டு இன்று கோவில் நடை திறக்கப்படுகிறது.

Update: 2022-04-10 01:05 GMT
திருவனந்தபுரம்,

சமரிமலை ஐயப்பன் கோவிலில் வருகின்ற 15-ந் தேதி சித்திரை விஷூ வழிபாடுகள் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, நாளை அதிகாலை மீண்டும் நடை திறக்கப்படும். அப்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்கான ஆன்லைன் பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டது. கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகளிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சித்திரை விஷூ பண்டிகையை முன்னிட்டு கோவிலில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். 15-ந் தேதி சித்திரை விஷூ வழிபாடுகள் நடைபெறுகிறது. அன்று காலை கனிகாணும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

மேலும் செய்திகள்