புதுச்சேரியில் பயங்கரம்: கருங்கல்லை தலையில் போட்டு முதியவர் கொலை - போலீசார் விசாரணை...!

புதுச்சேரியில் கருங்கல்லை தலையில் போட்டு முதியவர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2022-04-08 05:30 GMT
சேதராப்பட்டு, 

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பைபாஸ் சாலை அருகே பரத் என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல் பிரியாணி கடையை மூடி விட்டு சென்று விட்டார்.

இந்த நிலையில் இன்று காலை பிரியாணி கடைவாசலில் முதியவர் ஒருவர் தலை நசுங்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து வில்லியனூர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். பின்னர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இன்ஸ்பெக்டர் ராமு, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில்,

முதியவர் தலையில் பெரிய கல்லை போட்டு மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர். இறந்து கிடந்த முதியவரின் சடலம் அருகே ஒரு பையும் அதில் துணிகளும், 3 ஒத்த செருப்புகளும் கிடந்து உள்ளது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 மேலும் தலை நசுங்கிய நிலையில் உள்ளதால் உயிரிழந்த முதியவர் யார் என்று அடையாளம் காணமுடியவில்லை. இது தொடர்பான விசாரணை தீவிரமாக நடந்து வருகின்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்