எச்.டி.எஃப்.சி வங்கியுடன், வீட்டு வசதி கடன் நிறுவனமான எச்.டி.எஃப்.சி இணைப்பு
எச்.டி.எஃப்.சியின் 25 பங்குகள் வைத்திருப்பவர்களுக்கு எச்.டி.எஃப்.சி வங்கியின் 42 பங்குகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் கடன் வழங்கும் எச்.டி.எஃப்.சி வங்கி, நாட்டின் மிகப்பெரிய வீட்டு வசதி கடன் நிறுவனமான எச்.டி.எஃப்.சிலிமிடெட் உடன் இணைந்து நிதிச் சேவைக் கூட்டமைப்பை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளன.
எச்.டி.எஃப்.சி வங்கியுடன், வீட்டு வசதி கடன் நிறுவனமான எச்.டி.எஃப்.சி இணைக்கப்பட்டுள்ளது. எச்.டி.எஃப்.சி-யின் 25 பங்குகள் வைத்திருப்பவர்களுக்கு எச்.டி.எஃப்.சி வங்கியின் 42 பங்குகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 2வது பெரிய நிறுவனமாக எச்.டி.எஃப்.சி வங்கி உருவெடுத்துள்ளது.
இந்த அறிவிப்பை அடுத்து எச்.டி.எஃப்.சி வங்கியின் பங்கு விலை 9% அதிகரித்துள்ளதாகவும் இணைப்புக்கு பிறகு எச்.டி.எஃப்.சி வங்கியின் மொத்த வர்த்தக மதிப்பு ரூ. 14.87 லட்சம் கோடியாகும் என கணிக்கப்பட்டுள்ளது.