வைரல் வீடியோ: காதலர் சண்டையை விலக்க சென்று கோபமான உணவு டெலிவரி பாய்

வைரல் வீடியோ காதலர்களின் சண்டையை சமரசம் செய்ய சென்ற உணவு டெலிவரி பாய் இளம்பெண்ணின் வாயால் கோபமாக அவரை கடுமையாக தாக்கினார்.

Update: 2022-04-02 06:28 GMT
புவனேஸ்வர்

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர்  நகரில் உள்ள இந்திரா காந்தி  பூங்காவுக்கு வந்த காதல் ஜோடி ஒன்றுக்கு இடையில் தகராறு ஏற்பட்டது. பூங்காவுக்கு வெளியே காதல் ஜோடி ஒருவருக்கு ஒருவர் குறை சொல்லி திட்டிக்கொண்டனர். , காதலி தனது காதலனை மிக ஆபாசமாக திட்டுகிறார்.

தனது காதலன் வேறொரு பெண்ணுடன் தன்னை ஏமாற்றி வருவதாகவும் ஆனால் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததாகவும் அவர் கூறுகிறார்.

 மேலும் அவர் மீது கல்லை வீசுகிறார்.அருகில் இருந்தவர்கள் திரண்டு வந்து இந்த சம்பவத்தை தங்கள் மொபைல் போனில் வீடியோ எடுக்க தொடங்கினர். இதனால் கோபமடைந்த காதலி ஆக்ரோஷமாகி, வழிப்போக்கர் ஒருவரின் மொபைல் போனை  பறிக்க முயன்றார்.

இந்த நிலையில் உணவு டெலிவரி பாய் ஒருவர்  சண்டையிடும் ஜோடிக்கு இடையில் பரிந்து பேசவும்  சமரசம்  செய்யவும் முயன்றார். இருந்தாலும் அந்த இளம் பெண் அதனை கேட்காமல் அங்கிருந்த அனைவரையும் ஆபாசமாக திட்ட தொடங்கினார். இதனால்  உணவு டெலிவரி பாய்க்கும் காதலிக்கும்  இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இறுதியில் அமைதியை இழந்த உணவு டெலிவரி பாய்  அந்த பெண்ணை தாக்க தொடங்கினார்.  அந்த பெண்ணை அடித்து நொறுக்கினார். அதிர்ச்சியடைந்த சுற்றி இருந்தவர்கள் தலையிட்டு அமைதிப்படுத்த முயன்றனர்.

இதுவரை, அந்த இளம் பெண்ணோ உணவு டெலிவரி பாயோ  முறையான புகார் அளிக்கவில்லை. புவனேஸ்வர் டிசிபி உமாசங்கர் தாஷ் கூறுகையில், "இது இரு தரப்பினரும் தாக்கிய சம்பவம் என்பதால், அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்ய உள்ளூர் போலீஸ்  அதிகாரியிடம் கேட்டுள்ளேன்" என கூறி உள்ளார்.


மேலும் செய்திகள்