காதலனை ஏவி சிறுமியை சீரழித்த இளம்பெண் ...! காம மிருகத்தால் துடிதுடித்த 11 வயது பிஞ்சு...!

இளம்பெண் ஒருவர் தன் காதலனை ஏவி சிறுமியை சீரழித்தஒரு கொடூரம் மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்துள்ளது

Update: 2022-03-29 06:16 GMT
கொல்கத்தா

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் அந்த 11 வயது பெண், தன்னுடைய உறவு பெண்ணுடன் வசித்து வந்தார். அந்த உறவுக்கார பெண் 22 வயது நபர் ஒருவரை காதலித்து வந்தார். வாலிபர்  அடிக்கடி காதலி வீட்டுக்கு வந்து போயுள்ளார். அப்போதுதான் 11 வயது பெண்ணை காதலியின் வீட்டில் பார்த்துவிட்டு, அந்த சிறுமி மீது ஆசை கொண்டுள்ளார். ஒருகட்டத்தில் அந்த சிறுமியை  அடைய வேண்டும் என்ற வெறியும் வாலிபருக்கு வந்து உள்ளது.

இதற்கு காதலியை சம்மதிக்கவைக்க காதலிக்கு ஒரு புதிய செல்போன் வாங்கி கொடுத்தார். மேலும் . கொஞ்சம் பணமும் கொடுத்துள்ளார். காதலி மகிழ்ச்சியாக உள்ள நேரத்தில்  11 வயது பெண்ணை அடைய வேண்டும் என்ற தனது ஆசையை காதலியிடம் கூறி உள்ளார். அதற்கு காதலியும்  சம்மதித்து உள்ளார். 

ஒரு நாள் சிறுமியை வாலிபருடன் தனியாக  தங்க வைக்க ஏற்பாடும் செய்தார். கடந்த ஞாயிறு, அதே வீட்டிலேயே 11 வயது சிறுமியை இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி   அதிக எதிர்ப்பு தெரிவிக்கவே சிறுமியை தாக்கி, அவரது அந்தரங்க பகுதிகளில் கட்டைகளை சொருகி உள்ளார்.

இதில் சிறுமி ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி கிடக்க, அவரை தூக்கி  கொண்டுபோய் யாருமில்லாத பகுதியில் வீசிவிட்டு சென்று விட்டார்.  மறுநாள் காலை, பாசிர்ஹாட் சப்-டிவிஷனில் உள்ள ஒரு மீன்வள துறை  அருகில் சிறுமி உயிருக்கு போராடி கிடப்பதை அந்த பகுதி மக்கள் பார்த்து அதிர்ந்தனர். உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.  தற்போது மேல்சிகிச்சைக்காக  சிறுமி கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இப்போது சிறுமி உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்.  தகவலறிந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்ததுடன், அவுராவின் டோம்ஜூர் மாவட்டத்தில் பதுங்கியிருந்த வாலிபரை  கைது செய்துள்ளனர். 

மேலும் செய்திகள்