சிறுமியின் தலையுடன் கிராமத்தில் சுற்றித் திரிந்த நபர்...! பெரும் பரபரப்பு

ஒடிசாவில் 8-வயது சிறுமியின் தலையை துண்டித்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-25 18:08 GMT
சம்பல்பூர், 

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தின் ஜமன்கிரா தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் எட்டு வயது சிறுமியின் தலையை துண்டித்து, துண்டிக்கப்பட்ட தலையுடன் அந்த கிராமத்தை சுற்றித் திரிந்த 30 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

8-வயது சிறுமி அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது சிறுமி செல்வதை கண்ட அந்த நபர் பின் தொடர்ந்து சென்று தான் மறைத்து வைத்திருந்த கோடரியால் சிறுமியின் தலையை வெட்டி எடுத்து. பின்னர், துண்டிக்கப்பட்ட தலையைப் பிடித்துக் கொண்டு அந்த கிராமம் முழுவதும் சுற்றித் திரிந்துள்ளார். இதனை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து, உடனே சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர். 

குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு குடிப்பழக்கம் உண்டு என்பதும், தலை துண்டிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருடன் அவருக்கு எந்தவித விரோதமும் இல்லை என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக குச்சிந்தா துணைப்பிரிவு போலீஸ் அதிகாரி ராஜ்கிஷோர் மிஸ்ரா தெரிவித்தார்.

சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்