நிலக்கரி வழக்கு: மம்தா பானர்ஜியின் மருமகனுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
நிலக்கரி வழக்கு தொடர்பாக மம்தா பானர்ஜியின் மருமகனுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
கொல்கத்தா,
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளருமான அபிசேக் பானர்ஜி மீது நிலக்கரி வாங்குவதில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் மேற்கு வங்கத்தில் நிலக்கரி கடத்தல் வழக்கில், நிலக்கரி கடத்தில் செய்த கொள்ளையர்களிடம் இருந்து, மம்தா பானர்ஜியுடன் மருமகன் அபிசேக் பானர்ஜி மற்றும், அவரது மனைவி ருஜிராவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையில், வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறையின் இயக்குனரக அலுவலகத்தில் அபிஷேக் பானர்ஜி, ருசிரா பானர்ஜி 21- ந் தேதி ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், நிலக்கரி ஊழல் வழக்கு தொடர்பாக வழக்கில் வாக்குமூலம் பதிவு செய்ய வரும் 29-ம் தேதி அபிஷேக் பானர்ஜி, ருசிரா பானர்ஜி டெல்லி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.