டெல்லி: திருமண பந்தலில் பயங்கர தீ விபத்து
தீ விபத்தினால், வானில் பெரிய அளவில் கரும்புகை வெளியேறியது.
டெல்லி,
டெல்லியின் ரோகினி பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த திருமண பந்தலில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால், வானில் பெரிய அளவில் கரும்புகை வெளியேறியது.
மதியம் 2 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 12 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஒருவர் லேசான காயமடைந்தார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. பலத்த காற்று வீசியதால் மரத்தால் செய்யப்பட்ட பந்தலில் தீ பரவிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.