இரும்புத்தாது கடத்தலை தடுக்க கோரி பொதுநல மனு: சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த வாரம் விசாரணை
இரும்புத்தாது கடத்தலை தடுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை அடுத்த வாரம் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புக்கொண்டுள்ளது.
புதுடெல்லி,
இரும்புத்தாது கடத்தலை தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை அடுத்த வாரம் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக வக்கீல் எம்.எல்.ஷர்மா, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் ஆஜராகி, நாள்தோறும் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு இரும்புத்தாது கடத்தல் நடைபெறுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.
முறையீட்டை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, இரும்புத்தாது கடத்தலை தடுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.