பஞ்சாப் மாநிலத்தில் பகத்சிங் நினைவு தினம் அரசு விடுமுறையாக அறிவிப்பு
இந்தியாவின் விடுதலை போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய பகத் சிங் நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது .
சண்டிகர்,
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பஞ்சாப்பின் புதிய முதல் மந்திரியாக ஆம் ஆத்மி வேட்பாளர் பகவந்த் மான் கடந்த வாரம் தேர்தெடுக்கப்பட்டார்.
இவரது பதவியேற்பு விழா பகத்சிங் பிறந்த ஊரான கட்கர் கலன் பகுதியில் கோலாகலமாக நடைபெற்றது. பகவந்த் மான் பதவியேற்பு நிகழ்ச்சியில், மஞ்சள் நிற தலைப்பாகை உடன் தொண்டர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் பகத்சிங் நினைவு தினத்தை அரசு விடுமுறையாக அறிவித்து முதல் மந்திரி பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவின் விடுதலை போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய பகத் சிங் நினைவு தினம் நாளை (மார்ச் 23) அனுசரிக்கப்படுகிறது . இதையொட்டி இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.