மராட்டியத்தில் கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை...!
மராட்டியத்தில் இன்று மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் கொரோனா 3-வது அலையின் தாக்கம் குறைய தொடங்கி உள்ளது. அதிலும் கடந்த சில நாட்களில் நோய் பாதிப்பு குறையும் வேகம் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,72,512 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,43,767 ஆக அதிகரித்துள்ளது.
மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 180 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 77,23,468 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது வரை மாநிலத்தில் 1,273 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.