புல்லட் ரயில் திட்டத்திற்காக 99.3 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது: குஜராத் அரசு

அகமதாபாத்-மும்பை புல்லட் ரயில் திட்டத்திற்காக 5 மாவட்டங்களில் 99.3 சதவீத நிலம் கைப்பற்றப்பட்டதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

Update: 2022-03-21 17:10 GMT
கோப்புப்படம்
அகமதாபாத்,

அகமதாபாத்-மும்பை இடையே புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில், குஜராத் மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் மொத்தம் 99.3 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தகவல் தெரிவித்த அம்மாநில வருவாய்த்துறை மந்திரி, புல்லட் ரயில் திட்டத்திற்காக இதுவரை ஐந்து மாவட்டங்களில் தேவையான 360.75 ஹெக்டேர் நிலத்தில் 358.31 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்றார். 

புல்லட் ரயில் கடந்து செல்லும் எட்டு மாவட்டங்களில் ஐந்து மாவட்டங்களில் மொத்தம் ரூ. 2935.85 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக குஜராத் அரசு கூறியுள்ளது.

மேலும் செய்திகள்