மளிகை பொருட்கள் விலை உயர்வு: மத்திய அரசு மீது ராகுல் காந்தி விமர்சனம்

மளிகை பொருட்களுக்காக மக்கள் செலவிடும் தொகை கடந்த 6 மாதங்களில் 9.3 சதவீதம் அதிகரித்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Update: 2022-03-21 16:27 GMT
புதுடெல்லி,

மளிகை பொருட்களின் விலை உயர்வால்,  நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக  மத்திய பாஜக அரசை ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார். ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:  மளிகை பொருட்கள் விலை உயர்வால் நாட்டு மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர். 

பாரதிய ஜனதா கட்சி அல்ல” என்று தெரிவித்துள்ளார். தனது டுவிட் பதிவுடன் மளிகை பொருட்களுக்காக மக்கள் செலவிடும் தொகை கடந்த 6 மாதங்களில்  9.3 சதவீதம் அதிகரித்து உள்ளதாகவும், 2 ஆண்டுகளில் 44.9 சதவிகிதம் உயர்ந்து இருப்பதாகவும் வெளியாகியுள்ள ஊடகச் செய்தியையும் மேற்கோள் காட்டியுள்ளார். 

மேலும் செய்திகள்