பெண் குழந்தை பிறந்ததால் மனைவிக்கு சூடு வைத்த கணவன், குடும்பத்தினர் - அதிர்ச்சி சம்பவம்

பெண் குழந்தை பிறத்ததால் மனைவிக்கு கணவன் இரும்பு கம்பியால் சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-03-21 05:36 GMT
Image Courtesy: Hindi news18
போபால்,

மத்தியபிரதேச மாநிலம் டிவாஸ் மாவட்டம் நரியஹிடா என்ற கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமி (22 வயது). இவருக்கு பப்லு ஜாலா என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது.

இதற்கிடையில், லெட்சுமி - பப்லு தம்பதிக்க்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், தனக்கு பெண் குழந்தை பிறந்த பப்லுவுக்கு பிடிக்கவில்லை. மேலும், அவரின் குடும்பத்தினருக்கும் பிடிக்கவில்லை. 

இதனால், பப்லு தனது மனைவியை லெட்சுமியை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக தாக்கியுள்ளார். மேலும் பப்லுவின் குடும்பத்தினரும் லெட்சுமியை தாக்கியுள்ளனர்.

லெட்சுமியின் மாமனார், மாமியார் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். கொடூரத்தின் உச்சமாக லெட்சுமியின் உடலில் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் இரும்பு கம்பியால் சூடு வைத்துள்ளனர். லெட்சுமியின் கைகள், கால்களில் சூடு வைத்துள்ளனர். பல நாட்களாக  லெட்சுமியை அடித்தும் துன்புறுத்தியுள்ளனர்.

இது குறித்து லெட்சுமியின் உறவினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து லெட்சுமியை மீட்ட அவரது உறவினர்கள் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லெட்சுமியின் கணவர் மற்றும் குடும்பத்தினரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

மேலும் செய்திகள்