காஷ்மீரில் சி.ஆர்.பி.எப். முகாம்கள் மீது பயங்கரவாதிகள் குண்டுவீச்சு 2 வீரர்கள் காயம்
காஷ்மீரின் சோபியான் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜைனபோராவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் (சி.ஆர்.பி.எப்.) முகாம் இயங்கி வருகிறது.
ஸ்ரீநகர்,
காஷ்மீரின் சோபியான் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜைனபோராவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் (சி.ஆர்.பி.எப்.) முகாம் இயங்கி வருகிறது.
இந்த முகாம் மீது நேற்று இரவு சுமார் 8.10 மணியளவில் பயங்ரவாதிகள் சிலர் கையெறி குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பி ஓடினர். இந்த குண்டு விழுந்து வெடித்ததில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் காயமடைந்தார்.
இதைப்போல புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் இயங்கி வரும் சி.ஆர்.பி.எப். முகாம் மீதும் பயங்கரவாதிகள் கையெறி குண்டு ஒன்றை வீசினர். இதிலும் வீரர் ஒருவர் காயமடைந்தார்.
குண்டுவெடிப்பில் காயமடைந்த 2 வீரர்களுக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.
சி.ஆர்.பி.எப்.பின் 83-வது நிறுவன தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், 2 முகாம்கள் மீது குண்டுவீச்சு நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.