திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆந்திர மாநில தலைமை செயலாளர் சாமி தரிசனம்

ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் சமீர்சர்மா தனது குடும்பத்தினருடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.

Update: 2022-03-19 20:35 GMT
திருமலை, 

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நேற்று மாலை ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் சமீர்சர்மா தனது குடும்பத்தினருடன் வந்து சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வந்த அவருக்கு, பிரதான நுழைவு வாயிலில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி சதாபார்கவி பூங்கொத்துக் கொடுத்து வரவேற்று தரிசன ஏற்பாடுகளை செய்து வைத்தார்.

கோவிலில் சமீர்சர்மா மற்றும் குடும்பத்தினர் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம் வழங்கப்பட்டது. கோவிலில் உள்ள தங்கக் கொடிமரத்தை வலம் வந்து வணங்கினார்.

மேலும் செய்திகள்