ராஜஸ்தான்: நெதர்லாந்தை சேர்ந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மசாஜ் சென்டர் ஊழியர் கைது..!
ராஜஸ்தானில் உள்ள மசாஜ் சென்டரில் நெதர்லாந்தைச் சேர்ந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஆயுர்வேத மசாஜ் சென்டர் ஒன்றில் நெதர்லாந்தை சேர்ந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மசாஜ் சென்டர் ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முன்னதாக, ஜெய்ப்பூரின் காதிபுராவில் உள்ள ஓட்டல் ஒன்றின் மசாஜ் சென்டரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் நெதர்லாந்தைச் சேர்ந்தவர், ராஜஸ்தானுக்கு சுற்றுலாவிற்காக வந்துள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில், மசாஜ் சென்டர் ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மசாஜ் சென்டர் ஊழியர் கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிஜ்ஜூ என்றும் கேரளாவிற்கு தப்பிச் செல்ல முயன்றபோது குற்றவாளியை கைது செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.