பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் பதவியேற்பு விழாவுக்கு மிகப்பெரிய பணச்செலவு மத்திய மந்திரி குற்றச்சாட்டு

பஞ்சாப்பின் புதிய முதல்-மந்திரியாக ஆம் ஆத்மியை சேர்ந்த பகவந்த் மான் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

Update: 2022-03-17 00:22 GMT
ஹமிர்பூர், 

பஞ்சாப்பின் புதிய முதல்-மந்திரியாக ஆம் ஆத்மியை சேர்ந்த பகவந்த் மான் நேற்று பதவியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சி கவர்னர் மாளிகைக்கு பதிலாக, புகழ்பெற்ற விடுதலை போராட்ட வீரர் பகத்சிங்கின் பூர்வீக கிராமமான கத்கர் காலனில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய அளவில் நிதி செலவழிக்கப்பட்டு உள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு மந்திரி அனுராக் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘பகத்சிங்கின் பூர்வீக கிராமத்தில் பதவியேற்பு விழாவை நடத்தியிருப்பதன் மூலம், ஆம் ஆத்மியின் மக்கள் சார்புத்தன்மை நிரூபிக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக அதிக அளவிலான பணத்தை தவறாக செலவழித்து உள்ளனர். இந்த பிரமாண்ட விழாவுக்காக விவசாயிகளின் பயிர்களும் சேதப்படுத்தப்பட்டு உள்ளன’ என குற்றம் சாட்டினார்.

டெல்லியிலும் ஆம் ஆத்மியினர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டிய மத்திய மந்திரி, இதனால்தான் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா போன்ற மாநிலங்களில் அந்த கட்சியை மக்கள் முற்றிலுமாக நிராகரித்து விட்டனர் எனவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்