சத்தீஸ்கர் சாலை விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம்: அம்மாநில முதல்-மந்திரி அறிவிப்பு
சத்தீஸ்கரில் , லாரியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் .
சத்தீஸ்கரில் , லாரியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் .
சத்தீஸ்கரில் உள்ள கரியாபந்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மெயின்பூர் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் லாரியும் டிராக்டரும் மோதி விபத்துக்குள்ளாகின .
இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் .மேலும் 17 பேர் காயமடைந்தனர் .இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ .2 லட்சமும் ,காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என சத்தீஸ்கர் முதல் - மந்திரி பூபேஷ் பாகேல் அறிவித்துள்ளார்