4 மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்
மேற்கு வங்காளம், சத்தீஷ்கர், மராட்டியம், பீகார் ஆகிய மாநில சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
மேற்கு வங்காளம், சத்தீஷ்கர், மராட்டியம், பீகார் ஆகிய மாநில சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி வரும் ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
16 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்காளத்தில் தலா 1 மக்களவை, 1 சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பீகார், மராட்டியம், சத்தீஷ்கரில் ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது.