உ.பி. சட்டசபை தேர்தல்: கோரக்பூர் தொகுதியில் யோகி ஆதித்யநாத் வெற்றி

உத்தரப்பிரதேச முதல் மந்திர யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.

Update: 2022-03-10 12:23 GMT
கோப்புப்படம்
லக்னோ,

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது.

இதில், உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 267 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. சமாஜ்வாதி கட்சி 133 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், தான் போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.  முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அவர், கோரக்பூர் நகர தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் சுபாவதி சுக்லாவை விட 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

மேலும் செய்திகள்